எஸ். பி. வேலுமணி (இயற்பெயர்: சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி, பிறப்பு: 5 அக்டோபர் 1969) தமிழக அரசியல்வாதி ஆவார். 2006, 2011[1], 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

தற்போது இவர் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.

தொகுதி – தொண்டாமுத்தூர்

தொடர்ந்து 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறேன்.

 1. தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசுக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
 2. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மாநிலத்திலேயே அதிகமான வீடுகள் தொகுதியில் கட்டுள்ளன. 
 3. ரூ.130.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தொண்டாமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது .
 4. ரூ.80 இலட்சம் மதிப்பில் கிறிஸ்தவ மக்களின் மயானம் புனரமைப்பட்டு, அணைத்து மதத்தினரின் மயானங்களும் புனரமைக்கப்பட்டு உள்ளன.
 5. தொண்டாமுத்தூர் தொகுத்துப்பட்ட அணைத்து ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, புனரமைக்கப்பட்டு உள்ளன. 
 6. தொகுதியில் இருக்கும் அருந்ததியர் உட்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் குலா தெய்வ கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. 
 7. தொண்டாமுத்தூர் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். 
 8. 230 கோடி நொய்யல் ஆறு தூர்வாரப்பட்டதால்  மழைநீர் வீணாகாமல் குளங்கள், குட்டைகளில் சேமிக்கப்படுகின்றன. 
 9. தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், தீத்திலிபாளையம் ஊராட்சி, நொய்யலாற்றின் குறுக்கே 2 90 இலட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. 
 10. ரூபாய் 130 கோடியே 46 இலட்சம் மதிப்பில் தொண்டாமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

அமைச்சரவை

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா மற்றும் மாண்புமிகு அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறேன்.

 1. 2013-14 -இல் நடத்தப்பட்ட அடிப்படட கணக்ககடுப்பில், தமிழகத்தில்45 சதவீதமாக இருந்த சுகாதார நிலை தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இன்று 100 சதவீதத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டம் செயப்படுத்தப்பட்டுள்ளது. 
 2. கோவை மக்களின் 50 ஆண்டுகால கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டம் 1,650 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 
 3. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் இந்தியாவிலேயே முதல்முறையாக கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கட்டுள்ளது. 
 4. தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை மூலம் 7450 MLD குடிநீர் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. 
 5. தமிழத்தில்  உள்ள அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் திறம்பட செயப்படுத்தப்பட்டு உள்ளன. 
 6. மத்திய அரசின் குடிநீர் மற்றும் கிராமங்களில் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பின் முன்னேற்றம் அடிப்படையில், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு பிரதமர் 
 7. இந்தியாவிலேயே முதல்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறையில் வீடுகள் தோறும் திடக்கழிவுகளை சேகரித்து, பதனிடுதல் மற்றும் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு பணிகளை ரூ.447 கோடி மதிப்பீட்டில், திடக்கழிவு மேலாண்மை பணிகளை பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள திட்டம் நடைமுறைப்படுத்தட்டு உள்ளது.
 8. உள்ளாட்சி அமைப்புகளில் மின் ஆளுகை திட்டங்ககளை நாட்டிலேயே சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது உள்ளாட்சித்துறைக்கு கிடைத்தது. 
 9. ஊரகப் பகுதிகளில் உள்ள 1.05 கோடி வீடுகளுக்கு 14 இலட்சத்து 41 ஆயிரம் பொதுக் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது., மேலும் ஒவ்வொரு தனிநபருக்கு 55 லிட்டர் குடிநீர் என்ற அளவில் வழங்கப்பட்டு வருகிறது. 
 10. தமிழக அரசின் சிறப்பு திட்டமான அம்மா உணவகங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன, மேலும் கொரோனா பெருந்தொற்று, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போதும் மக்களுக்கு விலையில்லாமல் தொடர் சேவைகளை செயல்படுத்தப்பட்டன.

கட்சி – அஇஅதிமுக 

அதிமுகவில் மாநில அமைப்புச் செயலாளராகவும், கோவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் தொடர்ந்து கழக பணியாற்றி வருகிறேன்.

 • அஇஅதிமுகவில் மாணவர் பருவம் முதலே கழக பணியாற்றி வருகின்றேன். 
 • 1990 ஆம் ஆண்டு முதன்முதலாக குனியமுத்தூர் பேரூராட்சி இளைஞரணி தலைவர்.
 • 2000 ஆம் ஆண்டு கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர்.
 • 2002 ஆம் ஆண்டு பேரூர் ஒன்றிய கழக செயலாளர்.
 • 2007 ஆம் ஆண்டு கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர்.
 • 2010 ஆம் ஆண்டு முதல் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளர்.
 • தற்போது கழக அமைப்பு செயலாளர் மற்றும் கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர்.