கடந்த 2011-ம் ஆண்டு முதல் அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக 107 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 2018 – 19 ஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் நாட்டிலேயே, தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எஸ்.பி.வேலுமணி தேசிய விருது பெற்றுள்ளார்.

2011-12 ராஷ்டிரிய கௌரவ கிராமசபா விருது 1 (இராமநாதபுரம் மாவட்டம் மேதலோடை ஊராட்சி)

2011-12 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4 தேசிய விருதுகள் மாவட்ட அளவில் 2, ஒன்றியம் அளவில் 1, கிராமஊராட்சி 1

2012-13 சிறந்த செயல்பாட்டுக்கான சமூக பங்களிப்பு என்ற தலைப்பில் தமிழகத்துக்கு தேசிய விருது

2012-13 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 3 தேசிய விருதுகள் மாவட்ட அளவில் 1, ஒன்றியம் அளவில் 1, கிராமஊராட்சி 1

2012-13 தேசிய அளவில் ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகள் 9 (6 கிராம ஊராட்சிகள் 2 ஊராட்சி ஒன்றியங்கள் 1 மாவட்ட ஊராட்சி ஒன்றியம்)

2012-2013 ராஷ்டிரிய கௌரவ கிராமசபா விருது 1 (திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குளம் ஊராட்சி)

2013-2014 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 3 தேசிய விருதுகள் மாவட்ட அளவில் 1 ஒன்றியம் அளவில் 1,கிராமஊராட்சி 1

2014-15 ஆம் ஆண்டில் மின்னணு ஆளுகை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்திற்கு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது

2014-15 தேசிய அளவில் ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகள் 9 (6 கிராம ஊராட்சிகள், 1 மாவட்ட ஊராட்சி, 2 ஊராட்சி ஒன்றியங்கள்)

2017-18 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் 5 தேசிய விருதுகள்

2017-18 மத்திய அரசின், கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேசிய விருது

2018-19 ஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் நாட்டிலேயே, தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு பிரதமரிடமிருந்து தேசிய விருது

2018-19 தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப முறையை சிறப்பாக செயல்படுத்தியதற்க மத்திய அரசின் இ-பஞ்சாயத் புரஸ்கார் விருது

2018-19 ஊராட்சிகளின் சிறந்த செயல்பாடு, திறன் மேம்பாடு, ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது, ராஷ்டிரிய கௌரவ கிராம சபா விருது என 12 தேசிய விருதுகள்

2018-19 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 8 தேசிய விருதுகள் (மாநில அளவில் 2, மாவட்ட அளவில் 4 ஊராட்சி ஒன்றிய அளவில் 1, கிராம ஊராட்சியில் 1)

2018-19 மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின், சிறப்பான செயல்பாட்டிற்காக தேசிய விருது உள்ளிட்ட 2 விருதுகள்

2018-19 தீன்தயாள் உபாயத்யாயா திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தமைக்காக, தேசிய தங்க விருது

2018-19 தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காக 2 தேசிய விருதுகள்

2019 ஆண்டில் மட்டும் ஊராட்சி அமைப்புகளின் சிறந்த செயல்பாட்டுக்காக ஒரே ஆண்டில் 31 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

2012 -2019 வரை மொத்தம் உள்ளாட்சித்துறையில் தமிழகத்திற்காக இவர் 99 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.