மக்கள் சேவை என்றென்றும் தொடரும்!

சாதி மத பேதங்களின்றி கட்சி வேறுபாடின்றி மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு சேவையாற்றுவதே எனது தலையாய கடமை! அம்மா அவர்களது ஆசியுடன் என்னுடைய மக்கள் சேவை என்றென்றும் தொடரும்!

அதிமுக தேர்தல் அலுவலகத் திறப்பு விழா.

அதிமுகவினர் பொறுமையாக இருக்க வேண்டும். குறுக்குவழியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதை தடுத்தது, இரட்டை இலையை மீட்டது நான்தான் என்பதால், ஸ்டாலின் என் மீது கோபத்தில் உள்ளார். சிறுபான்மையினர் பாதுகாப்பில் அதிமுக உறுதியாக இருக்கிறது.

எஸ்.பி. வேலுமணி

கோவையில் அனைவருக்கும் நன்கு பரீட்சையமான ஒரு பெயர் எஸ்.பி. வேலுமணி என்றால் மிகையாகாது. தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். Read more: https://tamil.indianexpress.com/election/tamil-nadu-assembly-elections-2021-sp-velumani-p-thangamani-and-cv-shanmugam-284077/

கரடிமடை பகுதியில் தேர்தல் பிரச்சாரம்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கரடிமடை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, அம்மா அரசின் வளர்ச்சி திட்டங்களையும், தாய்குலங்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கழகத்தின் தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரித்தேன்.

தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தேன்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில், சுண்டக்காமுத்தூர் பகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தேன்.

அஇஅதிமுகவில் இணைந்த ரஜினி மன்ற நிர்வாகிகள்.

கோவை தொண்டாமுத்தூரில் கோவை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் என்னை சந்தித்து, அஇஅதிமுகவில் இணைந்தனர். அவர்களை வாழ்த்தி வரவேற்றதில் மகிழ்ச்சி.

எஸ்.பி ஜனநாதன் மறைவுக்கு அமைச்சர் வேலுமணி இரங்கல்!

எஸ்பி ஜனநாதன் அவர்களின் மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து தற்போது சற்றுமுன் அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனநாதன் மறைவிற்கு இரங்கல் செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் & திரைத்துறையினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். Read more…

‘கோவையில் ஒரு பாரீஸ்’: ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்..!!

கோவை: ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாதிரி சாலையின் புகைப்படங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். read more: https://www.updatenews360.com/tamilnadu/minister-sp-velumani-tweeted-about-the-smart-city-project-010321/