அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்: இந்த மாவட்டத்தில் தான் அதிகளவில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தகவல்.!!

கோவையில் மொத்தம் 15 ஆயிரம் வீடுகள் கட்டபட்டு வருகிறது எனவும் 70 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்தவர்களுக்கு அதிக தொலைவில் வீடுகள் கட்டி கொடுக்கபட்டுள்ள நிலையில், இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மட்டுமமே அதே பகுதியில் வீடுகள் கட்டப்பட உள்ளது. தமிழக அரசு ஜாதி மதம் கடந்து அனைத்து திட்டங்களுக்கு செயல்படுத்தபட்டு வருகிறது என்றார். 116 கோடி மதிப்பீட்டில் 1195 வீடுகள் கட்டப்பட உள்ளது.போலியோ நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற Read more…

கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

சறுக்கு விளையாட்டை பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக இந்த ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.கோவையிலிருந்து குழந்தைகள் சறுக்கு விளையாட்டில் மாநில அளவில் பல்வேறு வெற்றிகளைப் பெற்று வருகின்றார்கள். இங்கு பயிற்சி பெறும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார்கள். கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க புறவழிச்சாலை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் உட்பட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Northeast Monsoon Precaution

At the behest of Hon’ble chief minister Edapaddi K .Palaniswamy, I chaired the review meeting at Chennai corporation about northeastmonsoon precaution measures on behalf of local administration and rural development department in the presence of colleagues R.B Udhayakumar, D.Jayakumar, P.Benjamin and officials.

கோவை ESI மருத்துவமனையில் பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்தேன்.

கோவை ESI மருத்துவமனையில் 11கி.லி. திரவ கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர், புதுப்பிக்கப்பட்ட கொரோனாவிற்கு பிந்தைய சிறப்பு கவனிப்பு பிரிவு, புதுப்பிக்கப்பட்ட செவிலியர் விடுதி, அதிக வசதியுடன் 135 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் COVID-19 சிகிச்சை பிரிவு ஆகியவற்றை துவங்கி வைத்தேன்.

ஜல் ஜீவன் மிஷன்

மாண்புமிகு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் தலைமையில் புதுடெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஜல் ஜீவன் மிஷன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து உரையாற்றினேன்.

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தென்கரையில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டினேன்.

கோவை, தொண்டாமுத்தூர் ஒன்றிய தென்கரை பேரூராட்சியில் உள்ள நீலியம்மன் மலைக்கோவிலில் இருந்து வரும் நீரை சேமித்தால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்ற அப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிதாக தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினேன்.