அம்மா நகரும் நியாய விலை கடையின் சேவையை துவங்கி வைத்தேன்.

அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவங்கி வைத்த நிலையில் கோவை தொண்டாமுத்தூரில் அம்மா நகரும் நியாய விலை கடையின் சேவையை துவங்கி வைத்தேன்.

வடிவேலம்பாளையம் பகுதியில் சமுதாய நலக் கூடத்தை திறந்து வைத்தேன்.

கோவை மாவட்டம் பூலுவப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட வடிவேலம்பாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.

கிண்டி தொழிற்பேட்டையில் ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை மாண்புமிகு அமைச்சருடன் இணைந்து திறந்து வைத்தேன்.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆணையின்படி சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ வளாகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை மாண்புமிகு அமைச்சர் திரு. D.ஜெயக்குமார் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தேன்.