அஇஅதிமுகவில் இணைந்த ரஜினி மன்ற நிர்வாகிகள்.

கோவை தொண்டாமுத்தூரில் கோவை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் என்னை சந்தித்து, அஇஅதிமுகவில் இணைந்தனர். அவர்களை வாழ்த்தி வரவேற்றதில் மகிழ்ச்சி.

கோவைப்புதூரில் தார் சாலை அமைக்கும் பணி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார்.

அதிமுக அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் நிகழ்வு.

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீலம்பூர் புறவழி சாலையில் அதிமுக அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக 106 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் & நிர்வாகிகள் முன்னிலையில் கழகக் கொடியை ஏற்றி வைத்தேன்.

சிங்கை மாநகர் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தினருடன் மாண்புமிகு துணை முதல்வரை சந்தித்தேன்.

கோவை, சிங்கை மாநகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகளுடன் மாண்புமிகு துணை முதல்வரை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுவை அளித்தேன்.

கோவை செட்டி வீதியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியாக தலா ரூ. 4 லட்சம் நேரில் வழங்கி ஆறுதல் கூறினேன்.

மாண்புமிகு முதல்வர் அவர்களது உத்தரவின்பேரில், கோவை செட்டி வீதியில் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 4 லட்சம் நேரில் வழங்கி ஆறுதல் கூறினேன்.