கோவை செட்டி வீதியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியாக தலா ரூ. 4 லட்சம் நேரில் வழங்கி ஆறுதல் கூறினேன்.

மாண்புமிகு முதல்வர் அவர்களது உத்தரவின்பேரில், கோவை செட்டி வீதியில் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 4 லட்சம் நேரில் வழங்கி ஆறுதல் கூறினேன்.

கட்டிட விபத்தில் காயமுற்றுசிகிச்சை பெற்று வருவோருக்கு நிவாரண நிதி வழங்கினேன்.

கட்டிட விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 50 ஆயிரம் வழங்கினேன். கோவையில் உள்ள 50 வருடங்களுக்கும் மேலான இடியும் தருவாயில் உள்ள கட்டிடங்களை கண்காணித்து அறிக்கை தர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.