ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, விழுந்த மரங்கள் இரவோடு இரவாக வெட்டி அகற்றப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 169 ல் உள்ள கண்ணன் காலணியில் ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 25 எச்பி பம்பு செட்டுகள் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு!

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தையும் ஊரகப்பகுதிகளில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டிய தருணம்.

மத்திய அரசு மானியத்தை விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளேன்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கான மானியம் ரூ.1,254 கோடியை உடனே விடுவிக்குமாறு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

ஜல் ஜீவன் மிஷன் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றினேன்.

மாண்புமிகு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் தலைமையில் புதுடெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஜல் ஜீவன் மிஷன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து உரையாற்றினேன்.

மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினேன்.

தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த கோவை மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.25,000/- ஊக்கத் தொகையை வழங்கினேன்.

அதிமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது!

 தமிழகத்தில் அதிமுக அரசின் சிறப்பான ஆட்சியால் அனைத்து துறைகளிலும் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்ளாட்சித் துறைக்கு அதிகமான விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நீர்மேலாண்மைக்கு விருது கிடைத்துள்ளது. சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீண்ட கால கோரிக்கையாக இருந்த அத்திக்கடவு- அவிநாசி திட்டப் பணிதற்போது நடைபெற்று வருகிறது. ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் விரைவில் நிறைவேறும் நிலையில் உள்ளது. கோவையில் ராணுவ தளவாட தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கடந்த 50 ஆண்டு Read more…

மருத்துவமனையில்கொரோனா சிகிச்சை பிரிவு ஆகியவற்றை துவங்கி வைத்தேன்.

மருத்துவமனையில் 11கி.லி. திரவ கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர், புதுப்பிக்கப்பட்ட கொரோனாவிற்கு பிந்தைய சிறப்பு கவனிப்பு பிரிவு, புதுப்பிக்கப்பட்ட செவிலியர் விடுதி, அதிக வசதியுடன் 135 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் கொரோனா சிகிச்சை பிரிவு ஆகியவற்றை துவங்கி வைத்தேன்.