கோவை மாவட்டத்தில் இருக்கும் எல்லா தொண்டர்களிடமும் அன்பாகவும், சகோதரன் போலவும் பழகி களப்பணியாற்றுவதால் கோவையில் அதிமுக பலமாகவும் கட்டுக்கோப்பாகவும் உள்ளது.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ்நிலையம், அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கான திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவியேற்றது முதல், ஊராட்சி முதல் மாநகராட்சி வரை பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன், புடச்சித்தலைவி அம்மா அறிமுகப்படுத்திய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமைச்சராக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றேன், சென்னையில் 2019-ம் ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு சென்னை மாநகர மக்களுக்கு விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் சொந்த கட்டிடங்களில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது, கோவை வளர்ச்சிக்காக பில்லூர் மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டம், வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்தது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் இந்தியாவிலேயே முதல்முறையாக கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தது என பல திட்டங்ககளை நான் செயல்படுத்தியுள்ளேன்.

கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது எனது முக்கிய பொழுதுபோக்கு.

தொண்டாமுத்தூர் தொகுதியில் பெருநகரப்பகுதிகளுக்கு இணையாக பல்வேறு மேம்பட்ட வளர்ச்சி பணிகளை அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், சாலை, குடிநீர், சிறுபாலங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் போன்றவற்றை சிறப்பாக அமைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தி இருக்கிறேன்.

கோவையில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண நிவாரண பொருட்கள் வழங்கினேன், அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து பல்வேரு தடுப்பு பணிகளை செய்துள்ளேன்.

நீர் மேலாண்மையில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன், தமிழகம் முழுவதும் ஏரி,குளங்களை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன், அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளேன்.

உள்ளாட்சி துறையின் சார்பில் தமிழகத்தில் முழுவதும் பல்வேறு ஏரி,குளங்கள் தூர்வாரப்பட்டு புதிப்பிக்கப்பட்டு உள்ளன, 2019 ஆண்டில் மட்டும் ஊராட்சி அமைப்புகளின் சிறந்த செயல்பாட்டுக்காக ஒரே ஆண்டில் 31 தேசிய விருதுகளை தமிழக உள்ளாட்சி துறை பெற்றுள்ளது, ஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் நாட்டிலேயே, தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதற்காக பிரதமரிடம் விருது பெற்றுள்ளோம்.

தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது, இயற்கை வளம் மற்றும் நீர்வள மேலாண்மை பணிகளை சிறப்பாக செயல்படுத்தியது, ஊராட்சிகளின் சார்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது என நகரங்களுக்கு இணையாக கிராமங்ககளை முன்னேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு முன்னெடுத்துள்ளது.